தடுப்பு, சோதனை, தோல்வி, டிஆர்டிஓ, பிருத்வி,இந்தியா, ஏவுகணை,
, interceptor, wheeler island,
scientists, isro, drdo, balasore, jolt, missile, air defence
நாம் ஏவுகணைகள் வானில் ஏவினால் அந்நிய நாடுகள் அந்த ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிக்கும் வல்லமை பெற்று இருக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் வான் தடுப்புக்களை மீறி சென்று இலக்கை அடையும் வகையில் தொழில் நுட்பம் வாய்ந்த ஏவுகணை தயாரிப்பது அவசியமாகும்.
பல்லி டெக்னிக் ஏவுகணை!
பல்லி தன்னை தற்காத்துக் கொள்ள வாலை அறத்து போட்டுவிட்டு ஓடிவிடும். அது போல ஒரு ஏவுகணையானது வானில் செல்லும் போதே தன்னை வானில் தாக்க ஏதெனும் வான் தடுப்பு ஏவுகணை வருகிறதா? , அருகில் வருகிறதா? என்று கண்காணித்துக்கொண்டே செல்ல வேண்டும். அப்படி அருகில் வரும்போது நாம் அணுப்பிய ஒரு ஏவுகணை மூன்று ஏவுகணையாக மாறும்படி செய்திருக்க வேண்டும். அப்படி மாறிவிட்டால் வான்தடுப்பு ஏவுகணைக்கு நமது ஒரு ஏவுகணைதான் பலியாகும் மீதி 2 சரியான இடத்தை தாக்கும்.
போர் ஆயுத ஏவுகணைக்கும் செயற்கைகோள் சுமந்து செல்லும் ஏவுகணைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடுகள்
போர் ஆயுதமான நீண்ட தூர ஏவுகணைக்கும் ஆக்கப் பணிகளுக்கான செயறகைக்கோள்களைச் செலுத்தும் ராக்கெட்டுக்கும் உயரே பாய்கின்ற விதத்தில் ஒற்றுமை இருக்கிறது. மற்றபடி இரண்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என்ப்தற்காகவே பல சமயங்களிலும் செயற்கைக்கோளைச் செலுத்தும் ராக்கெட்டுகளை செயற்கைக்கோள் செலுத்து சாதனம் (Satellite Launch Vehicle) என்று குறிப்பிடுவர். ஒரு செயற்கைக்கோளை உயரே கொண்டு செலுத்திய பிறகு ராக்கெட்டின் வேலை முடிந்து விடுகிறது. ஆனால் ஏவுகணையானது மிக உயரே சென்று விட்டு நீண்ட தூரம் பயணம் செய்து, மறுபடி காற்று மண்டலத்துக்குள் நுழைந்து கீழ நோக்கி இறங்கி, ஏற்கெனவே திட்டமிட்டபடி எதிரி நாட்டின் இலக்கைக் குறி தவறாமல் தாக்கியாக வேண்டும்.
ஏவுகணை இவ்விதம் காற்று மண்டலம் வழியே அதி வேகத்தில் இறங்கும் போது அதன் முகப்பு சுமார் 3000 டிகிரி செண்டிகிரேட் அளவுக்கு சூடேறும். ஆகவே முகப்பில் வைக்கப்பட்டுள்ள அணுகுண்டை அந்த வெப்பம் தாக்காதபடி தக்க பாதுகாப்புக் கவசம்இருக்க வேண்டும். தவிர, கீழே உள்ள இலக்கை அடைகின்ற வகையில் வழியறிவு ஏற்பாடு இருக்க வேண்டும். அந்த ஏவுகணை உயரே கிளம்பியதிலிருந்து கீழே இறங்கும் வரையிலான நேரத்தில் பூமி தனது அச்சில் சற்று சுழன்று விட்டிருக்கும். இதையும் கணக்கில் கொண்டால் தான் ஏவுகணை குறி தவறாமல் தாக்க முடியும்.
அக்னி -2 ஏவுகணை
தவிர, எதிரி நாட்டின் முக்கிய இலக்குகளைப் பற்றி துல்லியமான அட்சரேகை தீர்க்கரேகை விவரங்களுடன் நம்பகமான மேப்புகள் தேவை. ஏவுகணையின் அணுகுண்டு அடங்கிய முகப்பு கீழ் நோக்கி இறங்கும் போது குறிப்பிட்ட அட்சரேகையும் குறிப்பிட்ட தீர்க்க ரேகையும் சந்திக்கிற இடத்தைத் தான் தேடிச் செல்கிறது. ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டரில் இந்த விவரங்கள் இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்னர் கொசாவோ (Kosovo) போரின் போது அமெரிக்காவின் சாதாரண ஏவுகணை ஒன்று சீனத் தூதரகத்தைத் தவறுதலாகத் தாக்கியது. அந்த ஏவுகணையில் துல்லியமற்ற பழைய மேப் இடம் பெற்றிருந்ததே அதற்குக் காரணம் என்று பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது. செயற்கைக்கோளை செலுத்துகின்ற ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் போன்ற எரிபொருளைப் பயன்படுத்த இயலும். கடைசி நேரத்தில் தான் இவற்றை நிரப்புவர். இதற்கு நிறைய நேரம் பிடிக்கும். ஆனால் ஏவுகணைகளில் இம்மாதிரியான எரிபொருளைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் ஏவுகணை எந்த வினாடியிலும் உயரே கிளம்ப ஆயத்த நிலையில் இருந்தாக வேண்டும். பொதுவில் ஏவுகணைகளில் திட எரிபொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.
செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கென நிரந்தர ராக்கெட் தளம் இருக்கும். ஆனால் ஏவுகணைகள் எங்கே உள்ளன என்பது யாருக்கும் தெரியக்கூடாத விஷயம். பொதுவில் ஏவுகணைகளை எங்கிருந்து வேண்டுமானாலும் செலுத்த முடியும். சில ஏவுகணைகளை விசேஷ டிரக்கிலிருந்து செலுத்த முடியும். வேறு சில ஏவுகணைகளை தண்டவாளத்திலிருந்து தான் செலுத்த இயலும்.
இந்தியா, ஏவுகணை, தடுப்பு, சோதனை, தோல்வி, டிஆர்டிஓ, பிருத்வி, balasore, jolt, missile, air defence, interceptor, wheeler island, scientists, isro, drdo