குறட்டை தூங்கும் போது ஏன் வருகிறது என்று தெரியுமா?
நாம் சுவாசிக்கும் காற்றானது, நுரையீரலுக்கு செல்ல தடைபடும் போது குறட்டை ஏற்படுகிறது. ஆனால் அந்த குறட்டை தூங்கும் போது ஏன் வருகிறது என்று தெரியுமா, தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுகிறது, அதற்கு பெயர் தான் குறட்டை.
ஏன் தூங்கும் போது குறட்டை வருகிறது என்று தெரியுமா?
உலகில் 90 சதவீத மக்கள் குறட்டையால் அவஸ்தைப்படுகிறார்கள். குறட்டை வருவதற்கு பின்னணியில் ஏராளமான காரணங்கள் உள்ளன. அறிவியல்பூர்வமாக, சுவாசப்பாதையின் தசைகள் அளவுக்கு அதிகமாக ரிலாக்ஸ் அடையும் காற்று உள்ளே சென்று வெளிவருவதால் குறட்டை வருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறட்டை விடுவதால் எவ்வித கடுமையான பிரச்சனையையும் சந்திக்காவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் குறட்டை விடுவதால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும் மற்றும் அருகில் படுப்போரின் தூக்கமும் போகும். இப்போது தூங்கும் போது குறட்டை வருவதற்கான வேறு சில காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
மருந்துகள் பெரும்பாலான மருந்துகள் ஒரு குறிப்பிட்ட பக்க விளைவுகளைக் கொண்டிருக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன் தூக்க மாத்திரைகள் மற்றும் ஹிசுட்டமின் மருந்துகளை எடுத்தால், அதனால் குறட்டையானது அதிக சப்தத்துடன் வரும்.உடல் பருமன் உடல் பருமனால் பல வழிகளில் வாழ்க்கையை பாதிக்கும். அதில் இதய நோய், பக்கவாதம், கருத்தரிப்பதில் பிரச்சனை மற்றும் தூக்க குறைபாடுகளான குறட்டை விடுதல் போன்றவை அடங்கும். குறிப்பாக ஒருவருக்கு கழுத்து சிறியதாகவும், அவ்விடத்தில் கொழுப்புக்கள் அதிகமாகவும் இருந்தால், குறட்டை வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.இரவில் வேகமாக உணவை உட்கொள்வோரை விட, தாமதமாக வயிறு நிறைய உட்கொள்வோருக்குத் தான், அதிக அளவில் குறட்டை வரக்கூடும். மது அருந்துவதும் குறட்டை வருவதற்கான காணங்களில் ஒன்று. ஆல்கஹால் குடித்த உடனேயே தூங்குவதற்கு பதிலாக, இரவில் தூங்குவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே ஆல்கஹால் பருகலாம். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக குறட்டை பிரச்சனையைக் குறைக்கலாம்.அடிநாச் சதை . உங்கள் குழந்தைகள் குறட்டைவிட்டால், பெற்றோர்கள் உடனே அவர்களுக்கு அடிநாச் சதை சோதனையை எடுத்துப் பார்க்க வேண்டும். அடிநாச் சதை வீங்கியிருந்தால் தான் குழந்தைகளுக்கு குறட்டை வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே குறட்டை விடும் உங்கள் குழந்தையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதியுங்கள். மென்மையான தலையணை மற்றும் நேராக படுப்பது போன்றவையும் குறட்டை வருவதற்கான காரணங்களுள் ஒன்று. எனவே உங்களுக்கு குறட்டை வந்தால், தலையணை இல்லாமல் தூங்குங்கள். இல்லாவிட்டால், இடதுபக்கமாக தூங்குங்கள். மூக்கடைப்பு உங்களுக்கு அடிக்கடி மூக்கடைப்பு ஏற்பட்டாலும் குறட்டை வரும். அதிலும் உங்கள் மூக்கைச் சுற்றி சளி அதிகம் தேங்கியிருந்தால், சுவாச பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். சுவாச பிரச்சனைகள் இருந்தால், குறட்டை கண்டிப்பாக வரும். எனவே தேங்கியுள்ள சளியை வெளியேற்ற முயற்சி செய்யுங்கள்.